விஜயகலாவின் தொடர்பாக திட்டமிட்ட அவதூறு பரப்பும் மகிந்த தரப்பு புலனாய்வுதுறை – பெண் உதவியாளருக்கு விளக்கமறியல்!!

விஜயகலாவின் பெண் உதவியாளருக்கு விளக்கமறியல்!! அடியாட்கள் மிக கேடுகெட்டவர்கள்!! என்ற தலைப்பில் போலியான வதந்திகளை திட்டமிட்ட முறையில் படிப்பறிவற்று அரச நிர்வாகத்தில் இணைந்து ஆராவது ஒருவரக்கு எடுபிடியாக வேலை செய்து காலத்தை ஓட்டும் மகிந்த ஆதரவு அரச புலனாய்வு பிரிவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தனிப்பட்ட ஆலோசகரான பெண் உட்பட இருவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு போலியான வதந்தியை மகிந்த ஆதரவு தமிழ் அரசியல் ஏதிலிகள் செய்தி பரப்பி உள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்பை போலியாக தயாரித்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கை தூதுவரிடம் வழங்கி பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இந்த பெண்ணையும் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஒருவரையும் கொழும்பு மோசடி தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தனர்.

இருவருக்கும் விஜயகலா மகேஸ்வரனுக்கும் , விஜயகலா மகேஸ்வரனின் கட்சிக்கும் , அரசியல் செயற்பாட்டுக்கும் , அமைச்சுக்கும் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் அற்றவர்கள்.

குறித்த இருவரும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அலுவலகத்தில் வேலை செய்யவும் இல்லை , ஆலோசகராக இருக்கவும் இல்லை.

விஜயகலா மகேஸ்வரனின் தனிப்பட்ட செயலாளராக அப்படி பட்ட ஒரு பெண்ணும் இருக்கவும் இல்லை.

தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்ற பெண்ணும்,  எதிரிசிங்க வீதி, மிரிஹான நுகேகொட என்ற முகவரில் வசித்து வந்த ருவான் தர்மபிரிய எதிரிசிங்க என்ற நபர் ஆகியோர இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை நோர்வேயில் இருக்கும் பிரபல ஆசிய செய்தி நிபுணரான சேது மீதும் திட்டமிட்ட அவதூறை படிப்பறிவற்ற Army , Police TID உளவுத்துறையினர் பரப்பி வருகின்றனர்.

நோர்வேயில் வசித்துவரும் நோர்வே சேது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா , முன்னால் ஜ.நா செயலாளர் பான் கீ மூன்,  தற்போதையை ஜ.நா செயலாளர் அன்ரனியோ மற்றும் பல உலக நாட்டு தலைவர்களை சந்தித்து இலங்கை தொடர்பாக குரல்கொடுத்து வரும்  ஊடகத்துறை நிபுணராவார்.

சந்திரனை பாத்து நாய் குரைத்த கதையாக இலங்கையில் இருக்கும் இருக்கும் இணைய ஏதிலிகளின் நகைப்பான செயல்களில் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான செய்தி படிப்பறிவற்ற Army , Police TID உளவுத்துறையினர் பரப்பி வருகின்றனர்.

இவர்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை சமூக நலன் விரும்பிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

 

 

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *