விடுதலையையையும் வலியுறுத்தும் சம்மந்தன்

குற்றம் இளைத்தவர்களாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்காக இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சபையில் வலியுறுத்தினார்.

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

காலம் தாழ்த்தியேனும் இந்த காரியாலோம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. காரியாலையம் உருவாக்கப்பட்டு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், இழப்பீடுகள் மற்றும் மீண்டும் இவை இடம்பெறாமை என்பன நிலைமாறு பொறிமுறையின் அம்சங்களாகும். இவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியமம் பெறுகின்றது.

இந்த சட்டமூலம் வரவேற்கதக்க விடயம். ஆனால் இது நீதியை புறக்கணிக்கும் வகையில் அமையக் கூடாது. இழப்பீடுகள் குறித்த காரியாலையம் மூலமாகவேனும் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

இரா. சம்பந்தர் தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர். காலம்காலமாக சிங்கள அரசு அவரிற்கு கொடுத்துவரும் சலுகைகளை அனுபவித்துவரும் இவர், தனது சலுகைகளை கைவிடமுடியாத நிலையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கைவிட்டு சிங்களதேசத்தின் ஆதிக்கத்தின் கீழ் தமிழர்கள் வாழவேண்டுமென்ற கொள்கையுடன் சிங்களக்கூலியாக செயற்பட்டுவருகின்றார்.

குற்றங்கள் எதுவும் செய்யாது சிறைகளில் வாடும்  தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான திறப்பு தன்னிடம் இல்லை என்று  முன்னொரு தடவை இவர் கூறியிருந்தது கானொளியாக வெளி வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *