கட்டார் விமான நிலையத்தில் மைத்திரியை உளவு பார்த்தது யார்?

ஐக்­கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்ள ஶ்ரீலங்காவின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சென்ற போது, அவ­ரது பாது­காப்­புக்கும் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­படும் வகையில் இடம்­பெற்­றுள்ள சம்­ப­வங்கள் குறித்து சி.ஐ.டி. விசா­ர­ணை­களை

ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்வா முன்­வைத்­துள்ள முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக சி.ஐ.டி. கொழும்பு பிர­தான நீதி­மன்றுக்கு பீ 648 எனும் இலக்­கத்தின் கீழ் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது.

அத்­துடன் இந்த விசா­ர­ணை­களில், ஜனா­தி­பதி அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகர் நோக்கி பய­ணிக்கும் போது, டோஹா கட்டார் விமான நிலை­யத்தில் சந்­தே­கத்­துக்கு இட­மாக நட­மா­டிய ஒருவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அவரின் கைகளில் இருந்த அப்பில் ரக கைய­டக்கத் தொலை­பேசி கைப்­பற்­றப்­பட்டு மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஜாசிங்க விஜே­நா­யக்க மலித இசுரு என்­ப­வரே இவ்­வாறு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. யால் நீதி­மன்­றுக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி குறித்த சம்­பவம் வரு­மாறு:

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த செப­டம்பர் 25 ஆம் திகதி ஐ. நா. கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றினார். இதற்­காக அவர் கடந்த செப்­டம்பர் 22 ஆம் திகதி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் இருந்து புறப்­பட்டுச் சென்றார். அவ­ருடன் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள் அரச அதி­கா­ரி­களும் சென்­றனர்.

அந்த விஜ­யத்­துக்கு முன்னர் அரச உளவுத் துறை பணிப்­பா­ள­ரிடம் இருந்து ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு குறித்து அறிக்கை பெறப்­பட்­டது.

அதில், ஜனா­தி­பதி அமெ­ரிக்கா சென்று ஐ. நா. கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்கும் போது, அல்­லது வேறு சந்­திப்­புக்­களை நடாத்தும் போது அவ­ருக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் ஐ. நா. வளா­கத்­துக்­குள்ளோ அல்­லது சந்­திப்­புக்கள் நடக்கும் இடங்­க­ளிலோ இடம்­பெறும் என கூறப்­பட்­டது. இதனை நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தமர் எனக் கூறப்­படும் ருத்­ர­குமார் உள்­ளிட்டோர் ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­தது.

ஜனா­தி­பதி தல­மை­யி­லான குழு­வினர் செப்­டம்பர் 23 ஆம் திகதி நியூ­யோர்க்கை அடைந்­தனர். அவர்கள் அங்கு பார்க் எவ­னியூ, லொஸ் ரீஜென்ஸி எனும் ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்­தனர். அதில் ஶ்ரீலங்கா ஜனா­தி­ப­திக்கு மேல­தி­க­மாக இஸ்ரேல் ஜனா­தி­பதி உள்­ளிட்­டோரும் தங்­கி­யி­ருந்­தனர்.

இந் நிலையில் ஜனா­தி­பதி, குறித்த ஹோட்­டலில் தங்­கி­யி­ருந்த அறை இலக்கம் உள்­ளிட்ட அவ­ரது பாது­காப்பு குறித்த மிக இர­க­சிய தக­வல்கள் ஒரு இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அவ்­வி­ணை­யத்­த­ளத்தில் ஜனா­தி­பதி அமெ­ரிக்கா செல்லும் போது அவ­ரது குழு­வி­ன­ருடன் இருக்கும் விமா­னத்தில் வைத்து எடுக்­கப்­பட்ட படமும் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­விட ஜனா­தி­ப­தியின் பய­ணத்தின் இடை நடுவே, டோஹா கட்டார் விமான நிலை­யத்தில் ஜனா­தி­பதி செல்லும் போது சந்­தே­கத்­துக்கு இட­மாக நடந்­து­கொண்ட ஒருவர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார். ஜாசிங்க விஜே நாயக்க மலித்த இசுரு என்­ப­வரே இவ்­வாறு விசா­ரணை செய்­யப்­பட்டார். அவ­ரிடம் இருந்த அப்பில் ரக கைய­டக்கத் தொலை­பே­சியும் கையேற்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதி குறித்த தகவல்கள் அதிலும் அதி இரகசியமான பாதுகாப்பு குறித்த தகவல்கள் எப்படி ஒரு இணையத்தளத்துக்கு சென்றது என்பது குறித்து கணணிக்குற்றங்கள் சட்டத்தின் 24 (6) ஆம் அத்தியாயத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன என சி.ஐ.டி. நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *