தமிழ் அரசியல்வாதிகளுக்கு தனி சட்டம் ?

நாடாளுமன்றதை குண்டுவைத்து தகர்ப்பதாக கூறிய விமல் வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நல்லாட்சி அரசாங்கம், விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் இனரீதியான வேறுபாட்டையே உணர்த்துவதாக, தென் தமிழீழம் மட்டக்களப்பில் வைத்து ஊடகங்களை சந்தித்த போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் உரை தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததோடு, அவரின் இராஜாங்க அமைச்சு பதவியை பறித்து, கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.

குறிப்பாக அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணி உள்ளிட்ட கட்சிகள் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த நிலையில், அவர் தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு தமது சட்டத்தரணிகளுடன் முன்னிலையாகியிருந்த விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *