புலிகள் அமைப்பு பொருளாதார ரீதியில் பலமிக்கதாக உள்ளது; ஜீ.எல்.பீரிஸ்

விடுதலைப்புலிகள் அமைப்பை யுத்தகளத்தில் தோற்கடித்த போதிலும் அந்த அமைப்பு பொருளாதார ரீதியில் பலமான நிலையிலேயே உள்ளது என முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தங்களின் நிதியை இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

அவர்களுக்கு லண்டன் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட ஏராளமான நிறுவனங்களும் உள்ளன.

எனவே தற்போதைய நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலைய வேலைத்திட்டங்களில் அவர்களின் பலத்தைக் காண்பிப்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் பெறுபேறு நாட்டுக்கு பாதாகமாக அமையும்“ என தெரிவித்துள்ளார்.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *