யாழிலிருந்து கொழும்புக்கு ஹயஸ் வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும்

நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்

1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை.

2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா ? அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று.

வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க வேண்டும்

3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.
உதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்

4. Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.

5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.

6. பயணிக்கும் நேரம்.??? பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.

அல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.
அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.

இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு.

அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும் van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம். இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது.

எனவே கொஞ்சம் சிந்தித்து பயண முடிவுகளை எடுங்கள்

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *