இலங்கையும் நோர்வேயும் இணைந்து செயற்படவுள்ளதாக ரணில் தெரிவிப்பு..!!

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே வழங்கி வரும் ஆதரவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் இடம்பெற்ற நோர்வே பிரதமருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல், பொருளாதாரம், மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றின் முன்னேற்றம் தொடர்பாக நோர்வே அரசாங்கத்திற்கு தெளிவு படுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன் மீள்குடியேற்றம், மனித உரிமைகளை தொடர்பான செயற்பாடுகள் போன்றவற்றின் முன்னேற்றம் தொடர்பாக எடுத்துரைத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றிகளையும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் வாழுகின்ற புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நோர்வேயின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் தற்போதைய அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க
இதற்காக இரு நாடுகளும் நெருக்கமான இணைந்து செயற்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *