பயங்கரவாத தடுப்புபிரிவினரால் அதிதீவிர விசாரணைக்கு உட்பட்டுள்ளார் பிரபாகரன்!!

தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்

மீண்டும் தலைதூக்குகின்றது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் விசாரணைகள். தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் அதிதீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

கடந்த 03.10.2018 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைமையகத்திலிருந்து கல்முனை பிரிவினுடாக அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக்கடித்தின் பிரகாரம் அவர் நேற்றையதினம் காலை கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் தலைமையகத்திற்கு சென்றிருந்தார்.

அதனடிப்படையில் காலை 09.00 மணிக்கு சென்ற அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் அதன் மூலம் முன்னெடுக்கப்பட்ட நினைவு தினங்கள் என இன்னும் பல விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் மேலும் விசாரணைக்குட்படுத்த வேண்டியிருப்பின் சமுகமளிக்க வேண்டும் என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார். இந்த ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் எதுவும் எமது அமைப்பினூடாகவும் தனிப்பட்ட விடயங்களிலும் மேற்கொள்ளவில்லை.

இருந்தும் இந்த நல்லாட்சி என கூறும் அரசாங்கத்திலும் மீண்டும் தலைதூக்குகின்றது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் விசாரணைகள் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *