யாழில் 38 பேரை கைது செய்த பொலிஸார்…!!

யாழ்ப்பாணத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் ஆகிய 4 பொலிஸ் பிரிவுகளில் குழு மோதல்கள் தொடர்பான 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவ் மோதல்களில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த 38 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் யாழ்பப்பாண மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நேற்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது

அண்மையில் எனது ஆளுமைக்கு கீழ் உள்ள குறித்த 4 பொலிஸ் நிலைய எல்லைப் பரப்புக்குள் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன.

அத்துடன் வெளிப்பிரதேசங்களில் 8 சம்பவங்களுமாக மொத்தம் 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத குழு மோதல்களில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் கடந்த காலங்களை விட சற்றுக் குறைவானதாகவே தற்போது வன்முறைச் சம்பங்கள் இனம் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரால் இதுவரை 29 உழவு இயந்திரங்கள் கள்ள மணலுடன் பிடிக்கப்ப ட்டுள்ளன. மேலும் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் பகுதியில் 27 உழவு இயந்திரங்கள் கள்ள மணலுடன் பிடிக்கப்ப ட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படட அனைத்து உழவு இயந்திரங்களும் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *