கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோத்தாவுடன் ஒப்பந்தம் அடித்துக்கூறுகிறார் டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் செல்வராசா கஜேந்திரன் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு பெருந்தொகைப் பணத்தை கையாடியவர் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் வே.பிரபாகரனை விச ஜந்து எனக் கூறியதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாக கருத்துரைத்த கஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் அவர் ஒரு துரோகி என்றும் கூறியிருந்தார்-

கஜேந்திரகுமாரின் குறித்த விமர்சனம் தொடர்பில் நாளேடு ஒன்றுக்கு பதிலளிக்கையேலேயே மேற்படி ஒப்பந்த விவகாரத்தை வெளிப்படுத்தியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா. 

அவர் குறித்த நாளேடுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் கஜேந்திரனுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை. 40 ஆயிரம் சவப்பெட்டிகளை தயார் செய்து வைத்திருங்கள் என்று பாராளுமன்றில் கூறிவிட்டு தப்பித்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர். அவர் பிரச்சினைகள் எல்லாம் முடிந்தபின்னரே யாழ்ப்பாணத்திற்கு வந்தார்.

நாடு திரும்ப முன்னர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தகொண்டார். அதில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது சகோதரனை விடுவிக்குமாறு கேட்டிருந்தார். சகோதரன் விடுவிக்கப்பட்டால் தான் மீண்டும் நாட்டிற்கு வந்து தமிழ் தேசியக் கூட்டமைபை பிளவுபடுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார் எனவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

தப்பித்து தலைமறைவாக உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களை காட்டிக்கொடுப்பதாகவும் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்த ஒப்பந்தம் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சில செயற்பாடுகள் நடைபெற்றிருந்தமை எல்லோருக்கும் தெரியும்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வர முன்னர் கொழும்பில் பதுங்கிவைக்கப்பட்டிருந்த சொத்துக்கள் புலிகளின் மறைவுக்கு பின்னர் விற்று பணமாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக கஜேந்திரன் என்னை தமிழ் மக்களின் துரோகி என்றும் கூறியுள்ளார். தமிழ் மக்களின் துரோகி யார்? என்பதை அந்த மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

விளம்பரங்கள்

largefillerad

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *